உறவின் பின் பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை தேவையா?

204

tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

பாலியல் மருத்துவம்:உடலுறவு குறித்து வெளிப்படையாக பேச இன்றளவும் நமது சமூகத்தில் பெரிய தயக்கம், கூச்சம் இருக்கிறது. ஆனால், இந்த தயக்கம் மிகவும் அவசியமா? இதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? மருத்துவர்களிடம் இது குறித்த சந்தேகங்கள் கேட்க ஏன் வெட்கப்படுகிறோம் என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம். இது, இல்லறம் மற்றும் உறவுகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவர் கூறிய விளக்கங்கள் மற்றும் தெளிவுரை…

நாற்பதுகளில்…

நாற்பதுகளுக்குள் நுழைந்துவிட்டால் நீரிழவு, இதய கோளாறுகள், உறவுகளுக்குள் அதிகரிக்கும் மனஅழுத்தம், ஹார்மோன் சமநிலை கோளாறு போன்ற பல காரணங்களால் விறைப்பு பிரச்சனை உண்டாக துவங்கும். இது மிகமிக இயல்பான ஒன்று. சிலருக்கு இது முப்பதுகளில் கூட ஆரம்பிக்கலாம். இதற்கான தீர்வு இருக்கிறது, ஆனால்… யாரும் அதிகம் இதற்காக மருத்துவர்களை அணுகுவதில்லை. ஆண்கள் மட்டுமல்ல, 40% பெண்கள் தங்களுக்கு இருக்கும் உடலுறவு பிரச்சனைகளை வெளியே கூறாமல், அதனுடனே வாழ்ந்து வருகிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை தகவல் மூலம் அறியப்படுகிறது.

பிரச்சனைகள்!

பெண்கள் மத்தியில் பெண்ணுறுப்பு வறட்சி, உணர்ச்சி எலும்புதலில் குறை, உடலுறவின் போது வலி, சிறுநீர் பாதை தொற்று போன்றவை உடலுறவின் போது தாக்கங்கள் உண்டாக்குகின்றன. இதனால் ஆண், பெண் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமின்மை உண்டாகும், திருமண வாழ்வில் உடலுறவு இல்லாத உறவு நீடிக்கும்.

ஏன் மருத்துவரை அணுக வேண்டும்?

சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனை நமது துணையையும் சேர்த்து பாதிக்கும். மேலும், அந்தரங்க பிரச்சனை ஆண், பெண் யாருக்கு இருந்தாலும், தம்பதியாக சிகிச்சை, பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கிரார்கள். ஏனெனில், உடலுறவு பிரச்சனைகளில் ஒன்றாக தீர்வு காணுதல், அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கவும், விரைவாக தீர்வு காணவும் உதவும் என அறியப்படுகிறது.

சுலபமல்ல…

கூறவும், படிக்கவும் இது சுலபமாக இருக்கலாம். ஆனால், உடலுறவு பிரச்சனைகள் குறித்து வெளியே கூறுவது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. ஒரு நபர் விறைப்பு பிரச்சனைக்கு வயாகரா எடுத்துக் கொண்டால் தீர்வு கிடைத்துவிடும் என முயற்சித்து வந்தார். ஆனால், நீரிழிவு இருந்த காரணத்தால் அவருக்கு அது பயனளிக்கவில்லை. இதனால், தனது உடலுறவு வாழ்க்கை அவ்வளவு தான் என முடிவு செய்து, எந்த மருத்துவரிடமும் அதுப்பற்றி கூறாமல், பல ஆண்டுகளாக மன அழுத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடைசியில் அவர் தகுந்த மருத்துவரை அணுகி, சரியான பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டு தக்க பலன் அடைந்துள்ளார். உடலுறவு கல்வி என்பது சிறியவர்களுக்கு மட்டுமல்ல, பல சமயங்களில் பெரியவர்களுக்கும் தேவைப்படுகிறது.

கூச்சம் தவிர்!

இன்றைய நிலையில், உடலுறவு பிரச்சனைகள் இல்லாத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண், பெண் இருவர் மத்தியிலும் உடலுறவு பிரச்சனைகள் இருக்கிறது. நமது வாழ்வியல், உணவியல், வேலை சார்ந்து பல மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. உடல் உழைப்பு இல்லாமல், மூளையை மட்டுமே பயன்படுத்தி உட்கார்ந்த இடத்திலேயே உலகை சுற்றிக் கொண்டிருப்பதால் தான் மூளை சீக்கிரம் மந்தமாகிவிடுகிறது, உடல் மிகவும் சோம்பலாகிவிடுகிறது.

மிக மிக அரியவகை பிரச்சனைகள் அல்லது தாக்கம் ஆழமாக இருத்தல், பால்வினை நோய்கள் போன்ற உடலுறவு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இல்லையே தவிர. மற்றபடி நீங்கள் பெரிய பிரச்சனை என்று நினைக்கும் பல அந்தரங்க கோளாறுகளுக்கு தீர்வு இருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் மிக சீக்கிரம் தீர்வு காணலாம்.