உங்கள்மு தலிரவு குதூகலமாக இருக்க!

917

 

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரில் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின்னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்து வரப் போகிறோமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும்.

ஆனால் ஆண்கள் தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே யோசித்து நன்கு தயாராக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அப்படி இருவரும் ஒன்றாக சந்திக்கும் முதலிரவின் அறையை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேண்டுமென்று யோசிப்பார்கள். மேலும் தன் மனைவி வசதியை உணரும் வகையில் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு கணவனின் கடமையாகும். இப்போது அந்த முதலிரவு குதூகலமாய் அமைய, முதலிரவு அறையை வித்தியாசமாக அலங்கரிக்க மற்றும் முதலிரவுக்கு செல்லும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.

ரொமான்டிக் அறை

முதலிரவு நன்கு ரொமான்டிக்காக இருக்க வேண்டுமெனில், சற்று வித்தியாசமாக நல்ல ரொமான்டிக் பாடல்களை போட்டு விடலாம். இதனால் முதலிரவு அறை ரொமான்டிக் நிறைந்து இருக்கும்.
பூவைக் கொண்டு அறையை அலங்கரிக்கவும்

முதலிரவு அறையில் உள்ள கட்டிலில் நல்ல நறுமணமிக்க பூவான ரோஜா மற்றும் மல்லிகைப் பூவை தூவி விடுவதோடு, சிறிது நறுமணமிக்க ரூம் ஸ்ப்ரே அடித்து விடலாம். அதிலும் மனதை வருடும் வகையில் உள்ள ரூம் ஸ்ப்ரே அடிக்கலாம். இதனால் காதல் உணர்வுகள் தூண்டப்படும்.
மெழுகுவர்த்தி

முதலிரவு அறையை நல்ல ரொமான்டிக்காக மாற்றுவதில் மெழுகுவர்த்தி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆகவே அறையில் மின்சார விளக்குகளை எரிய வைக்காமல், நல்ல நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஆங்காங்கு ஏற்றி வைத்தால், அந்த அறையில் ரொமான்ஸ் புகுந்து விளையாடும்.

பாடி ஸ்ப்ரே
முதலிரவில் இருவரும் மிகவும் நெருக்கமாக அஜால்குஜாலாக இருக்கப் போவதால், தவறாமல் நல்ல வாசனையுள்ள பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபடுவதோடு, பாலுணர்ச்சியும் அதிகம் தூண்டப்பட்டு, அன்றைய இரவு சூப்பராக செல்லும்.

மனைவியை வசதியாக உணர வையுங்கள்
பொதுவாக பெண்கள் புது இடம் என்றால் சற்று வசதியின்மையை உணர்வார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வசதியின்மையாகத் தான் இருக்கும். ஆகவே உங்கள் மனைவியை வசதியாக உணர வைப்பதற்கு, அவர்களிடம் அன்பு, அக்கறை போன்றவற்றை நன்கு வெளிப்படுத்த வேண்டும்.

பரிசுகள்
பரிசுகள் விரும்பாத பெண்கள் இருப்பார்களா? ஆகவே முதலிரவுக்கு வரும் மனைவிக்கு, அவர்களுக்கு பிடித்தவற்றை பரிசாக வாங்கிக் கொடுங்கள். ஒருவேளை உங்கள் மனைவிக்கு பிடித்தது என்னவென்று தெரியாவிட்டால், மனைவியின் உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மனைவியின் மனதில் நல்ல இடம் பிடிப்பதோடு, நாள் முழுவதும் சிரித்த முகத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

உள்ளாடை
உங்கள் கணவனின் மூடு நீண்ட நேரம் இருக்க வேண்டுமெனில், கருப்பு அல்லது சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொள்ளுங்கள். இது அவர்களது உணர்ச்சியை அதிகரிக்கும். அதேப் போல் ஆண்களும் வித்தியாசமானதை முயற்சிக்கலாம்.