உடலுறவில் விருப்பம் குறையும் பிரச்சனையும் தீர்வுகளும்!

191

உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பில்லை எனும் முறையைப் பின்பற்றுவதுண்டு. ஆனால் இது எல்லா சமயத்திலும் பாதுகாப்பான முறையாக இல்லாமல் போகலாம். பொதுவாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும் கடைசி நாட்களுக்குப் பிறகு சில நாட்கள் கருத்தரிக்க வாய்ப்பில்லை, அவை உடலுறவுக்குப் பாதுகாப்பான நாட்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் இது சற்று ஆபத்தானது. இது எப்போதும் நினைத்ததுபோல் பயன் கொடுக்காமல் தோல்வியடையக்கூடும்.

காரணங்கள் (Reasons)

மாதவிடாய் சுழற்சிகள் வேறுபடலாம் (Menstrual cycles differ)

பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களைக் கொண்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது, எனினும், எல்லோருக்கும் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடுவது மட்டுமின்றி, ஒரே பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி வேறுபடக்கூடும். கால இடைவெளி, அறிகுறிகள் என எல்லா மாதமும் ஒன்றே போல் இருப்பதில்லை, சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம். ஒருவருக்கு மாதவிடாய் சுழற்சி நாட்கள் 28 எனில், அந்த 28 நாட்கள் காலகட்டத்தின் நடுவில் அதாவது 14வது நாள் அவர்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம். சிலசமயம், மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஒருசிலருக்கு கருமுட்டை வெளிவரலாம், அல்லது இன்னும் முன்கூட்டியே கூட வெளிவரலாம்.

கர்ப்பமடைய உகந்த காலகட்டத்தை முன்கணிக்க முடியாது (Unpredictable fertility window)

பொதுவாக, மாதவிடாய் சுழற்சியில் சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் கர்ப்பமடைய ஏற்ற நிலையில் இருப்பார், இந்த நாட்களில் உடலுறவு கொண்டால் அவர் கர்ப்பமடைவார். இதையே கர்ப்பமடைய ஏற்ற காலகட்டம் என்கிறோம். இது கருமுட்டை வெளிவரும் நாளும் அதற்கு முந்தைய ஐந்து நாட்களும் உள்ளடங்கும். இந்த காலகட்டம் ஒவ்வொரு மாதத்திற்கும் மாறுபடலாம், இந்தக் காலகட்டத்தைக் கணிக்க சில வழிமுறைகளும் உபகரணங்களும் உள்ளன, ஆனாலும் அவை நம்பகமானவை அல்ல. சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு, இந்த கர்ப்பமடைய வாய்ப்புள்ள (கர்ப்பத்திற்கு உகந்த) காலகட்டத்தைக் கணிப்பது கடினம், அதே சமயம் சீரான மாதவிடாய் சுழற்சி இருப்பவர்களுக்கும் இது கடினம் தான், அவர்களுக்கும் வேறுபடும்.

விந்தணுக்களின் ஆயுட்காலம் (Lifespan of the sperm)

கருமுட்டையின் ஆயுட்காலம் 24-48 மணிநேரம், ஆனால் விந்தணுவோ ஒரு பெண்ணின் உடலுக்குள் 3 முதல் 5 நாட்கள் வாழக்கூடும். இந்த நாட்களில் அது கருமுட்டையை எதிர்கொள்ள நேர்ந்தால் அப்பெண் கர்ப்பமாகலாம்.

புறக் காரணிகள் (External factors)

மன அழுத்தம், உடல்நலமின்மை, பயணம் ஆகியவற்றாலும் கருமுட்டை வெளியிடும் செயல் பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணிகள் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்த்தி உங்கள் கருமுட்டை வெளியிடப்படும் தேதியை மாறக்கூடும்.

இறுதிக்கருத்து: நீங்கள் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பினால், உடலுறவுக்குப் பாதுகாப்பான நாட்கள் என்று எதுவும் இல்லை என்று நினைத்துக்கொண்டு அதற்கேற்ப, கர்ப்பத்தைத் தடுப்பதற்கான இன்னும் நம்பகமான, பலன் கொடுக்கக்கூடிய பிற வழிமுறைகளைப் (உதாரணமாக ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் போன்றவை) பயன்படுத்துவதே நல்லது. ஏதேனும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.