சுய இன்பம் -சரியா ? தவறா ?-ஆயுர்வேத அணுகுமுறை

813

சுய இன்பம் தவறா?

தவறில்லைஎனஆயுர்வேதத்திலேயேவாதிடசிலகாரணங்கள்

1. கிலைப்யம் எனும் ஆண்மைக்குறைவு (Impotence or Erectile dysfunction)-க்கு முக்கிய காரணம் ஆச்சார்யா சரகா கூறியது அசேவனம் – உபயோகப்படுத்தாதது அல்லது அதைப்பற்றிய அறிவு இல்லாதது அல்லது உணர்ச்சிகள் அற்ற நிலை.

ஆச்சார்யா சுசுருதா – ஆறுவை சிசிச்சையின் தந்தை சரகாவிற்கு ஒருபடி மேலே போய் 6 விதமான கிலைப்யம் எனும் ஆண்மைக்குறைவு நோயினில் – ஒரு விதம் ஸ்திர சுக்ர நமித்தஜம் (தங்கி விட்ட சுக்ரம்) என்றதோர் பிரிவையே எடுத்துரைக்கிறார் .

2. வாத்சாயனார் முதல் நந்தி ஆச்சார்யா வரை உள்ள காமசூத்திர புத்தகங்களை எழுதியவர்கள் கூட சுய இன்பத்திற்கு எதிராக இப்புத்தகங்களில் ஒன்றைக்கூட காணமுடியவில்லை.

3. அடக்க கூடாத 13 மலமுத்ராதி வேதங்களில் ரேதஸ் எனும் Semen (விந்து ) 13வதாக உள்ளது. எனவே காம எண்ணங்களோ விந்து கூட அடக்ககூடாத வேகம் என்பது தெளிவு.

தவறு தான்எனஆயுர்வேதத்திலேயேவாதிடசிலகாரணங்கள்.

1. அதிகமான சுக்ரமும், உயிர் தாது ஓஜஸூடைய நட்டமும் பலகீனத்தை ஏற்படுத்திவிடும்.

2. கை என்பது கரடு முரடான பகுதி யோனி மிகவும் மென்மையான பகுதி ஒருவன் கையினால் விந்தை வெளிப்படுத்துவான் எனில் அவனது உறுப்பு மென்மையான பகுதியில் சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டு விந்து முந்திவிட காரணமாகிறது.

3. தாது க்ஷயத்திற்கும் (அழிவிற்கு) காரணமாகி உடல் மெலியும்.

4. மனம், சுக்ரம் ஓஜஸ் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டால் ஞாபகசக்தி குறைவு கவன சிதைவு மனஒருமை இன்மை தடுமாற்றம் மயக்கம் என்பவை தோன்ற காரணமாகிவிடும்.

தவறு என்று சொல்வதற்கில்லை என்றாலும் கூட சில காரணங்களுக்காக எதிர்க்காமல் இருக்கலாம் பால்வினை நோய்களால் மனிதன் பாழ்பட்டு போவதை விட கையால் இழந்து சில மனசஞ்சலத்திற்கு ஆளாகலாம்.

வள்ளுவன் கூட

“தொடிதற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ” – 1159

அதிகம் விந்தையழித்தால் விடிற்சுடம் அத் தீ உடலழிக்கும் உடன் மனமழிக்கும் என்கிறார் . என்றும் இக்குறளுக்கு பொருளுணரலாம்.

உடலில்சுக்ரதாதுகுறையும்போதெழும்குறிகுணங்கள்

மூட்டுகளில் பிடிப்பில்லாமல் இருப்பது (சந்தி சிதிலத்வம்) தோள்பட்டை சந்தியில் வலி, மாம்ச குறைவு, இளைப்பு, இரத்த சோகை உடம்பின் பலகீனம், வாய் உலர்தல் , சில சமயங்களில் குறி மற்றும் விதைகளில் வலி ,விந்து கொஞ்சமாக சீக்கிரமாக வெளியேறுதல் பசியின்மை, உடல் இளைப்பு என சரக வாக்பட்ட மருத்துவ ஆச்சார்யார் கள் அந்த காலத்திலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார் கள்.

இப்பழக்கத்திற்கு (சுயஇன்ப) தீர்வுஎன்ன?

சமதோஷ, சம தாதுக்கள், சம மலங்கள், நிகழ்காலத்தில் இருக்கும் அத்மா மனங்கள் தெளிவான ஆரோக்கியமான பஞ்சேந்திரங்கள் தான் முழு ஆயுள்

இவைகளை நிலை நிறுத்தும் ஆயுளின்உபதூண்கள்முக்கியமான மூன்று அவைகள்.

பிரம்மச்சர்யம்

உணவு

தூக்கம்

எப்பொழுதெல்லாம் பிரம்மச்சர்யம் எனும் தூண் சரியாக இல்லையோ உணவு (நல்ல சத்துள்ள மற்றும் தூக்கம் (மன நிம்மதி ஊசலாட்ட மில்லாத தூக்கம் ) எனும் இரு தூண்களையாவது பலமாக வைத்திருந்தால் ஆயுளை நிலை நிறுத்தி விடலாம்.

ஒரு சராசரி மனிதன் அதிக சத்துக்களை உடலுக்குத் தராத உணவுகளை உண்டுவிட்டு, தினமும் அல்லது அதிக எண்ணிக்கையில் சுய இன்பம் மேற்கொண்டால் என்ன ஆகும் சிந்தித்து பாருங்கள். உணவு மற்றும் மற்ற முறைகளில் இழப்பை சரி செய்யமால் தான் செய்வது சரி சரி என தவறிழைத்தால் அம்மனிதனுக்கு நிச்சயம் கேடுதான். இதற்கு மேல் புகை மது என்றால் அழிவின் விளிம்புதான்.

எனவே நல்ல உணவு, ஆரோக்யமான மனநிலை, சுயகட்டுப்பாடு, தனிமையற்ற சூழ்நிலைகள், மனிதனை, புதுப்பிக்கும் பொழுதுபோக்குகள், ஆன்மீகத்தில் ஈடுபாடு, யோகாசனங்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மனிதனுடைய வெளி இவை தான் இப் பழக்கத்திற்கு தீர்வு.

நிச்சயமாக நல்ல உணவில்லாமல் சுய இன்பம் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தீபத்திற்கு உதாரணமாக கூறலாம். எண்ணை ஊற்றாமல் எரிகிறது பிரகாசமாக எரிகின்றதென்று வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால் திரியை கூட சாம்பலக்கிவிடும் தீபமாகிவிடும் அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரி யும் சில சமயங்களில் சுயகட்டுப்பாடில்லாத உணர்ச்சிகள் உத்வேகமாய் இருந்தாலும் மடைதிறந்த வெள்ளமாய் தோன்றினாலும் ஒன்றுமில்லாமல் வழிந்தோடிவிடும்.

[You must be registered and logged in to see this link.] உளுந்தில் செய்த பலகாரங்கள், பேரிச்சம் பழம், பாதாம், பிஸ்தா, ரஸகுல்லா பால்கோவா, போன்ற இனிப்பு வகைகள் அளவான எள் பதார் த்தங்கள், நிறைய பால், நெய், பாஸ்மதி அரி சிவகைகள் நெய் பாலில் பிசைந்த கோதுமை மாவால் சப்பாத்தி பரோட்டா பூனைக்காலி விதை அமுக்கிரான் கிழங்கு பொடி செய்து இட்டிபொடி போல சேர்த்தல் அசைவ பிரியரகளுக்கு கோழி, வெள்ளாடு , மீன், முட்டை முக்கியமாக ஆட்டின் உடைய விதைகளில் செய்த சூப்பு போன்ற உடலை வளர்க்கக்கூடிய உணவுகள், இனிப்பு சுவை மற்றும் மனதிற்கு பிடித்த உணவுவகைகள் அதிக கலோரி தரக்கூடிய புரோட்டின் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவுவகைகள் உண்டால் எப்பொழுதும் கேடு வராது

யோகாசனங்கள், தியானம், பிராணயாமம், காயகல்ப சிகிச்சை, மூலாதரம் முதல் ஆங்ஙை வரை குண்டிலினியை எழுப்பச் செய்யும் ஹடயோகங்கள், ஆரோக்கியமான மனநிலை அனைத்து மனிதனையும் உடலையும் சக்தி இழப்பையும் சீர் படுத்தி மனிதனை செம்மைபடுத்து