கனவினில் விந்து வெளியேற்றம் (அதிகப்படியாக) ஏன்?

471

 

1. எட்டாவது காரணமான அபான வாயு, மலக்கட்டு ,கிரகணி அல்லது கிருமிகள் முறையற்ற மலஜலம் கழிப்பது அவ்வேகங்களை தெரிந்தே வேலை பளு காரணமாகவோ வெட்கம் காரணமாகவோ அவ்வேகங்களை அல்லது வேறு காரணங்களுக்காகவோ அடக்குவது அல்லது தேவைக்கு அதிகமான வேலை கொடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் அபான வாயு கெட்டுவிடும்.

2. சுக்கிரனுக்கு எதிரான வெப்பம் உடல் சூடு எண்ணை தேய்த்து குளிக்காதது அதிகமான சாப்ட் ட்ரிங்க்ஸ் எனும் பெயரால் குளிப்பானங்கள் (Gas அதிகமுடைய Softdrinks ) குடிப்பது, அதிகமான எண்ணையில் பொரித்த பலகாரங்கள் (Fried & Fast Food ) வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் semen என்னும் விந்து (சுக்கிரனுடைய) சீத தன்மை மாறிவிடுதல்.

3. அதிகமான ஹர்ஷம் ,தர்ஷம் (வேறு எந்த வேலைகளுமில்லாமல் சதா Sexual feelings எண்ணங்களோடு இருப்பது.

மாதமிருமுறை கனவில் விந்து வெளியேற்றம் சரி என்றால் இதற்கு அதிகமான வெளியேற்றம் நிச்சியமாக கெடுதியே. உதாரணத்திற்கு தினமும் மலம் கழிப்பது எப்படி!!! பேதியாகும் போதும் இதுவும் இயற்கை சரியானது தான் என்பது போன்றது நவீன மருந்துவர்களின் கூற்று.

ஏனெனில் விந்துவின் ஒரு வெளியேற்றத்தின் சக்திபல ஐநூறு கலோரி தருகின்றன என்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 150 மில்லியன் விந்தணுக்களும் 48 மணி நேரம் Ovum (கரு முட்டை) வரும் வரை காத்திருந்து உயிருடனிருந்து ஓர் உயிரினை உருவாக்குகிறதென்றால் எத்தனை சக்திகள் அதன் மைட்டோ கானட்ரியாவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் !

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்” – எனும் குறள் பொருள் போல

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” எனும் பழமொழியாகவே ஆகிவிடும். எனவே சக்தி இழப்பீட்டை சரிசெய்தே ஆக வேண்டும். இதனை தான் வாஜீகரணம் என்னும் வரப்பிரசாதம் பல்வேறு நோக்கில் அணுகுகிறது.

உள்ளத்தூய்மை, படுக்கும் முன் சிறுநீர் கழித்தல், கவிழ்ந்து படுக்காதிருத்தல், இரவில் பச்சை வெங்காயம் மற்றும் அதிகமான முட்டைகள் சேர்க்காதிருத்தல், எண்ணை தேய்த்து குளித்தல், இளநீர் குடித்தல், உடல் சூட்டை தன்மை படுத்துதல் மேலும் காரணகாரியங்களை அலசி ஆராய்ந்து அவைகளை கைவிடல் என்பனவும். கடுக்காய், துளசி போன்ற மூலிகைகளும் இதனை (கனவில் அதிகம் விந்து வெளியேற்றம்) கட்டுப்படுத்தும்,

அதிகமான விந்து வெளியேற்றத்தை தடுக்ககூடிய மருத்துகள் என்னென்ன ?

அபயாமிருத்த ராசாயணம் என்ற லேஹியம் -(கடுக்காய் அதிகம் சேர்ந்த மருந்துகள் )

திரிவங்க பஸ்பம்

ஸ்ருங்கி பஸ்மம்

அயகாந்த பஸ்மம்

சிலாஜித் பஸ்பம் போன்ற மருந்துகளும் -அதன் கலவைகளும் மிக்க பலனை தரும் .

தாத்ரி அரிஷ்டம்

லாக்ஷா ஸ்ருங்கா அரிஷ்டம் போன்ற மருந்தைகள் -உடல் சூட்டை குறைக்கும் -அதிக விந்து வெளியேற்றத்தை தடுக்கும் ..

நெல்லிக்காய் லேஹியம் அல்லது ச்யவன ப்ராஸ லேஹியம் போன்ற மருந்துகள் மறைமுகமாக நல்ல பலன் தரும் ..

சந்தேகங்களை கேளுங்கள் ..

பயப்பட வேண்டாம் ..லாட்ஜ் வைத்தியர்களிடம் ஏமாந்திவிடாதீர்கள் ,போலி வைத்தியர்களை அடையாளம் கண்டு கொண்டு தவிர்க்க சொல்லுங்கள் .தவிருங்கள் ..உங்களது பணத்தை குறி வைத்து எமாத்திடும் போலி வைத்தியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள் ..