செக்ஸ் உணர்வு குறைபாடு +18

394

tamil sex tips, Tamil sex, tamil sex padangal. tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

எல்லா ஆண்களுக்கும் எல்லா நேரத்திலும் முழுமையான செக்ஸ் உணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஏதாவது ஒரு தாங்கமுடியாத இழப்பு, ஏமாற்றம், பசி, துரோகம், மன அழுத்தம் போன்ற நிலையில் செக்ஸ் உணர்வு குறைவாக இருக்கும். இந்தநிலையில், ஆண் உறுப்பு உடனடியாக விறைப்பு நிலையை அடையாது.

அப்படியே இருந்தாலும், பெண் பிறப்புறுப்புக்குள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்போது ஏற்படும் செக்ஸ் உணர்வில், முழுமைத்தன்மை இருக்காது.

உணர்ச்சியற்று இருத்தல் அல்லது உணர்வு இருந்தும் விந்து சரியாக வெளிப்படாமல் இருத்தல் போன்றவை நிகழலாம்.

இது ஏதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் என்றால் பயப்பட வேண்டாம்.

தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஆண் உறுப்பில் வலி (Priapism)

ஒரு சில ஆண்களுக்கு, விறைப்பின்போது வலி ஏற்படுவது உண்டு. இந்தநிலையில் அவர்களுக்கு செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.

ஒரு சில மருந்துகளைத் தொடர்ந்து உள்கொள்வது அல்லது ஆண்களின் உறுப்பில் ரத்தம் கட்டிக்கொள்வதுபோன்ற காரணங்களால் தாங்கமுடியாத வலி உண்டாகலாம்.

சுமார் 4 மணி நேரம் வரையிலும் நீடிக்கக்கூடிய இந்த வலி ஏற்படும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இல்லாதபட்சத்தில் செக்ஸ் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். அந்த எண்ணமே பயத்தைக் கொடுத்துவிடும்.

செயல்பாடுகளில் வலி (Dyspareunia) பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழைந்தவுடன் தாங்கமுடியாத எரிச்சல், வலி போன்றவை ஏற்படலாம்.

இதற்கு நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம். மேலும், இந்தப் பிரச்னை, ஆண்பெண் இருவருக்கும் ஏற்படலாம். பெரும்பாலும், விந்து வெளிப்படும்நிலையின்போது அதிக எரிச்சல் ஏற்படும்.

செக்ஸ் அடிமை (Sexual Addiction)

குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பதுபோல், சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு.

இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்யமுடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம்.

இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது.

ஆண்களுக்கு இந்தக் குறைபாடு அதிகரிக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவுகொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவுகொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவுகொள்ளுதல் போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில், மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதிசெய்ய முடியும்.

* அடிக்கடி சுய இன்பம் காணுதல்

* பல்வேறு உறவுகள்

* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

* பாதுகாப்பற்ற உடலுறவு

* ஃபோன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

* எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

* செக்ஸ் துன்புறுத்தல்

* கற்பழித்தல்

* அதிக பார்ட்னர்களை

விரும்புதல் இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.

அதனால், குடும்ப உறவு சீரழிந்து கணவன்மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள், இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவுகொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது.

இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக, சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும்.

ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (Satyriasis) என்று சொல்வார்கள்.

பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால், நிம்ஃபோமேனியா (Nymphomania) என்று சொல்வார்கள்.

இந்தக் குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன.

எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது.

செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்?

1995ம் ஆண்டு நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில், 32 நிமிடங்களில் ஒருவர் ஆறு முறை எழுச்சி அடைந்ததே அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக, திருமணமான புதிதில் அல்லது இளையவர்கள் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறை உறவுகொள்ள முடியும்.

அதன்பிறகு தினமும் உறவு அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் உறவு என்பதே பெரும்பாலானவர்களின் நடைமுறையாக இருக்கிறது.

ஆண் உறுப்பின் முன்தோல் அகற்றப்பட்ட ஆணால் மட்டுமே அதிகநேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது உண்மையா?

மருத்துவ ரீதியாக ஆண் உறுப்பின் முன்தோல் அகற்றப்படுவதில் எந்த நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்தோலை அகற்றுவதால், கிருமிகள் தேங்குவது தவிர்க்கப்படுகிறது என்று சொல்வதும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சில பெண்களுக்கு முன்தோல் அகற்றப்பட்ட உறுப்பு அதிக கிளர்ச்சியைக் கொடுக்கலாம் என்பது தவிர, கூடுதல் நேர உறவுக்கு இது எந்த வகையிலும் உதவி செய்வதில்லை.

ஆண்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் உறவில் ஈடுபட முடியும்?

இது ஆண்கள் மனத்தில் இருக்கும் ஆசையைப் பொறுத்த விஷயமாகும்.

முதன்முதலில் ஆசையுடன் நெருங்குபவர்கள், பெண் உறுப்பைப் பார்த்தவுடனே விந்து கொட்டிவிடக்கூடும்.

சிலர் உறுப்பை உள்ளே நுழைக்கும் முயற்சியில் இருக்கும்போதே விந்து வெளியாகக்கூடும்.

சாதாரணமாக, உறவில் ஈடுபட்டு பத்து நிமிடங்கள் வரை தாக்குப்பிடிப்பது சரியான நேரம் என கணக்கிடப்படுகிறது.

இதற்கு மேலும் நீட்டிக்க விரும்புபவர்கள் மேலே சொல்லியிருக்கும் பல டெக்னிக்குகளைக் கையாண்டு, வெற்றிபெற முடியும்.

தற்போது இதற்குச் சில மருந்துகள் உபயோகப்படுகிறது.

வயாகரா போன்றவை நல்ல முறையில் எழுச்சி பெறவும், உறவை நீட்டிக்கவும் பயன்படுகிறது.

ஆனால், இதுபோன்ற மருந்துகளை மருத்துவரிடம் உடலைக் காட்டி சோதனை செய்து சாப்பிடுவதே சிறந்தது.

ஆண்களால் எந்தெந்தச் சூழலில் உச்சகட்டத்தை அடைய முடியாமல் போகிறது?

தைராய்டு சுரப்பி போதிய ஹார்மோனைச் சுரக்காதபட்சத்தில், விதைப்பையில் இருந்து போதிய டெஸ்டோஸ்டீரான் சுரக்காமல்போதல் போன்றவற்றால் உச்சகட்டம் அடைய இயலாது.

மேலும் மன அழுத்தம், ஸ்ட்ரோக், நரம்புக் கோளாறுகள்,

முதுகுத் தண்டுவட காயம் போன்றவை காரணமாகவும் ஆண்களால் உச்சகட்டம் அடையமுடியாமல் போகலாம்.

ஆனால், இவை எல்லாமே மருத்துவச் சிகிச்சையின் மூலம் சரி செய்யக்கூடியதே.

ஆண்கள் உச்சகட்டம் அடைவதற்குப் பெண்கள் செய்ய வேண்டியது என்ன? பொதுவாகவே, பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

அதனால், ஆண்கள் அவசர அவசரமாகத் தங்கள் உறவை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.

உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச்சொல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும், ஆண்களைப் புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.

ஆண் உறுப்பைத் தொடுவது, பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும்.

அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித்தருவதுடன், ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால், எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை.

அதுபோல், ஆண்கள்தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

விருப்பம் இருக்கும்பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிட முடியும்.

ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளைத் தட்டி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளைக் காட்டுதல் போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபடச் செய்துவிட முடியும்.

ஆண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும்பட்சத்தில், ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள்.

அந்தக் குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.