உடலுறவில், பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?

10933

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது. மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடங்கி பிள்ளைகளை அடிப்பதுவரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.

மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது. ஆண்பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.

பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந்தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண்களுக்கும் உடலுறவு குறைபாடுகள் உண்டா?

பொதுவாக, ஆண்மைக் குறைபாடைப்போல், பெண்மைக் குறைபாடும் ஏற்படுகிறது. ஆனால், பெண்கள் அதை வெளிப்படுத்துவதில்லை அல்லது பெரிதுபடுத்துவதில்லை. பெண்களுக்கும் உடலுறவு உணர்வுக் குறைபாடு, உச்சகட்ட உணர்வு இல்லாமல் இருத்தல், உச்சகட்டம் ஏற்படாமை, செயல்படாதத் தன்மை, உடலுறவு அடிமை என்று பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவது உண்டு.

ஆனால், பெரும்பாலும் ஆண்கள் சொல்படி பெண்கள் இயங்குவதாலும், அவர்களது செயல்பாடுகளுக்கு இசைந்துகொடுக்கும் பணி மட்டுமே செய்து வருவதாலும் இவை பெரிய சிக்கலாக எழுவதில்லை. அதாவது, உடலுறவு ஈடுபாடு இல்லாத பெண் என்றாலும், கால்களை அகல விரித்துக்கொண்டு பிறப்புறுப்பை மட்டும் காட்டினாலே, ஆண்களால் உடலுறவு ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

அதனால், பெண்களுக்கு ஏற்படும் Sexual Addiction, Sex Arousm Disorder, Dyspareunia போன்றவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த நிலை தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.