பாலியல் உறவை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் செயல்பட டிப்ஸ்!

838

tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal


நீங்கள் கனவு கண்டவரை போலவே உங்களுக்கு ஒரு காதலன் அல்லது காதலி கிடைத்து விட்டால், அப்படிப்பட்டவருடன் காதல் உறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. ஆனால் திடீரென உங்களுக்கு அவரிடம் ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம். உங்கள் உறவு எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த முடிவு உங்கள் மனதை உடைத்தெறிந்தும் விடும். அந்த சோக முடிவு உங்களுக்கு பீதியை உண்டாக்கும். இந்த எண்ணங்கள் ஏன் தோன்றுகிறது?

ஏதவாது முன் அனுபவங்களால் தான் பொதுவாக இந்த எண்ணங்கள் தோற்றுவிக்கும். அதுவும் சாதரணமாக இல்லாமல் மிகவும் ஆழமாக வேரூன்றும். இவ்வகை உறவுகள் பல வகையில் மென்மையானதாகவே அமைகிறது. அது அழகான வளர்ச்சியை பெற அந்த உறவுகளை நாம் பாதுகாப்பாக கையாள வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு உங்கள் உறவை பாதித்து விடாதபடி பார்த்துக் கொள்ள பதற்றம் நிறைந்த உறவை பார்த்து கையாள வேண்டும். பதற்றங்கள் ஏற்படுவதை பற்றியும் பாதுகாப்பின்மை உணர்வு வேரூன்றி இருப்பதை பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கவே செய்யும். ஆனால் நம்மில் அனேக பேருக்கு தெரியாதது என்றால் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி தான்.

உறவுகள் சிறப்பாக அமைய பல பேர் பயன்படுத்தும் ஒரு டிப்ஸ் ஒன்று உள்ளது. அது உங்கள் உணர்வுகளை உங்களுக்குள்ளேயே மறைத்து வைத்து கொள்வது. ஆனால் இப்பிரச்சனையை கையாள இது சிறந்த வழியே அல்ல. உணர்வுகளை மறைத்து வைப்பதால் அது இன்னமும் தீவிரமடையுமே தவிரே தீர்வாக இருக்காது. ஒரு சமயத்தில் மனதில் அடக்கி வைத்த அத்தனை பாதுகாப்பின்மை உணர்ச்சிகளும் வெளிவரும் போது, அந்த கோபமே உங்கள் உறவை அழித்து விடும். அதனால் இந்த பதற்றத்தை நீக்க வேண்டுமானால், பாதுகாப்பின்மை உணர்வுகளுக்கான காரணங்களை கண்டறிய வேண்டும். உங்கள் துணைக்கும் அந்த உணர்வுகளை பற்றி எடுத்துரைங்கள். கடைசியில் அதற்கு ஒரு தீர்வையும் காணுங்கள். சரி உங்கள் உறவில் இப்படிப்பட்ட சிக்கலை சமாளிப்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

பதற்றத்தை ஏற்படுத்தும் காரணங்கள் உறவுகளில் பதற்றமான சூழலை தணிப்பதற்கு முன்னாள், முதலில் பதற்றத்திற்கான காரணங்களை கண்டறிவது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. நம்பிக்கையை இழத்தல், அதிகரிக்கும் சண்டைகள் மற்றும் மன அழுத்த காரணிகள் போன்றவைகள் தான் உறவுகளில் பதற்றங்களை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களாக விளங்குகிறது. உறவுகளுக்கிடையே ஏற்படும் போராட்டங்களால் ஏற்படும் எதிர்மறையான சூழலும் கூட இந்த பதற்றத்தை உண்டாக்கும். உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருந்தீர்களானால் அது உங்கள் உருவக்குள் ஒரு எதிர்மறையான சூழலை ஏற்படுத்தி விடும். பதற்றத்தை தணிக்க அறிவுரை பெறுவதற்கு முன்பாக நீங்கள் எவ்வகை சூழலை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மனதில் உள்ளதை பேசுங்கள் மனம் விட்டு பேசுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவும் உங்கள் உறவுகளில் பதற்றமான சூழல் ஏற்படும் போது அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் பாதுகாப்பின்மை உணர்வுகளை பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று பல உறவுகள் ரீதியான டிப்ஸ் கூறுகிறது. அப்படி பேசுவதால் இருவரின் மனமும் ஒத்துப் போகும் வகையில் ஒரு தீர்வு கிடைக்கும் அல்லவா? ஒரு உறவு வெற்றிகரமாக தொடர கணவன்/மனைவி இருவரும் கண்டிப்பாக மனம் விட்டு பேச வேண்டும். எப்போதும் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் பிள்ளையார் சுழி போடுங்கள் நம்பிக்கை என்பதே இல்லாமல் இருக்கும் ஒரு உறவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இன்றைய சூழலில் பல உறவுகளும் இந்த உதாரணத்திற்கு கீழ் தான் வருகிறது. ஆனால் வெறுமனே நம்பிக்கை என்பது இல்லாததால் அந்த நம்பிக்கையை உங்கள் உறவுக்குள் கொண்டு வரவே முடியாது என்றெல்லாம் கூறி விட முடியாது. முதலில் இருந்து மீண்டும் ஆரம்பியுங்கள் என்று ஒரு வாக்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே.

அதனை செய்யுங்கள்! நம்பிக்கை தான் உங்கள் சிக்கல்களுக்கு காரணம் என்றால் அது மெல்ல அகலும். தேவைகளை பற்றி மனம் விட்டு பேசுங்கள் நிபந்தனையற்ற காதலாக இருந்தாலும் கூட தேவைகள் என்பது என்பது இல்லமால் இருப்பதில்லை. அதனால் உங்கள் இருவருக்கருமே தனித் தனியாக தேவைகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த தேவைகளை பூர்த்தி செய்ய மற்றொருவரின் உதவி தேவை என்பதையும் மறந்து விடாதீர்கள். அதனால் இந்த உறவிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், உங்கள் தேவைகள் என்ன, அனைத்து விஷயங்களும் எப்படி நடக்க வேண்டும் என்பதை மனம் விட்டு உங்கள் துணையிடம் இருவருமே பேசி விடுங்கள். இதனால் பாதுகாப்பின்மை என்ற கதவுகள் நிரந்தரமாக மூடிக் கொள்ளும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள் பொதுவாக உங்கள் மனது வேலையில்லாமல் சும்மா இருக்கும் போது தான் இவ்வகை பாதுகாப்பின்மை உணர்வுகளை ஏற்படுத்தி விடும். அதனால் உங்கள் உடம்புக்கும் மனதுக்கும் எப்போதும் வேலை கொடுங்கள். அவைகளை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பதற்றம் ஏற்படும் சூழல்களை தவிர்த்திடுங்கள். உறவுகளை பற்றி மேற்கூறிய டிப்ஸ்களை பின்பற்றி சந்தோஷமான ஆரோக்கியமான உறவை எப்போதும் காத்திடுங்கள்