கண்களைப் பார்த்து பேசும் ஆணைத்தான் பெண்ணுக்குப் பிடிக்குமாம்!

2581

எந்த மாதிரியான கேரக்டர்களைக் கொண்ட ஆண்களைப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் கண்களைப் பார்த்து பேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்க, வாங்க, போங்க என்று மரியாதையாக பேசும் ஆண்களை அதிகமான பெண்கள் லைக் செய்கின்றனர்.

அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமயம் சிரித்த முகமாக இருக்கவேண்டும். அப்பாவி என்பதற்காக லூசுத்தனமான காரியங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக்கும் இவன் சரிப்பட்டு வருவான் என்று கூறும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

நல்ல தொழில், நல்ல படிப்பு, கைநிறைய சம்பத்தியம் வரும் வேலை கொண்ட ஆண்களை நாற்பது சதவிகித பெண்கள் விரும்புகின்றனராம். அதுதான் பாதுகாப்பானது என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.

கண்களைப் நேராகப் பார்த்து பேசும் ஆண்களைத்தான் பெண்கள் பெரிதும் நம்புகின்றனர். அதுதான் சரியான பேச்சும் கூட என்பது பெண்களின் கருத்து.

மசாலாவா பேசத் தெரிஞ்சாலும், படிப்பு, வேலையில கெட்டிக்காரத்தனமா இருக்கணும், படிப்பையோ, வேலையையோ விட்டுட்டு நம்ம கூட வெட்டியா பேசிட்டு இருக்கானே என்று நினைக்க வைக்கக் கூடாது.

பேச்சில் இனிமையும், சுவாரஸ்யமும் கொண்ட ஆண்களை அநேகம் பெண்கள் ரசிக்கின்றனராம். அவர் பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்பா என்று கூறவேண்டும். ஆளு மொக்கை பார்ட்டி என்று பெயர் எடுத்துவிட வேண்டாம்.

செக்ஸியாக பேசினால் பெண்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் அதற்காக எடுத்த உடனே ஆரம்பித்து விடவேண்டாம். அப்புறம் உங்கள் பக்கம் தலைவைத்த கூட படுக்கமாட்டார்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அப்புறம் என்ன பெண்களுக்கு பிடித்த மாதிரி பேசி அவர்களின் குட் புக்கில் இடம் பெறுங்களேன்.