aankalin vinthu utpathi, aankalukku viraippu piracchani, aanmai kurai erpada karanam, ankalin vinthu kaddi aaka, antharanga kelvi, antharangam, Best Sex Positions and Kama Sutra, fist night, Kama Sutra, kamakathaikal, kamam, Kamasutra
இளம் வயதினரிடையே காணப்படும் இந்த “செக்ஸ்டிங்” பிரச்சனை ஊடகங்களில் பெரிதாக கவனம் பெற்றது. பெற்றோர், கல்வி நிறுவனங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் போன்ற தரப்பினரிடையே இது கவலைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்தது. செக்ஸ்டிங் என்ற இந்தப் பழக்கம் 13-19 வயதுக்குட்பட்ட இளம் பிள்ளைகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. இளம் வயதினரில் மூன்றில் ஒருவருக்க இந்தப் பழக்கம் உள்ளது, அவர்கள் இதை இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்கின்றனர்.
செக்ஸ்டிங் பழக்கம் யோசிக்காமல் திடீரென்று ஏதேனும் செய்தல் என்ற பிரச்சனையுடனும், போதைப் பழக்கத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நபரின் மனநலத்தை அளவிடும் ஒரு அம்சமாக இந்தப் பழக்கத்தைக் கருத முடியாது, எனினும், அவரின் உண்மையான பாலியல் பழக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அறிகுறியாக இருக்கலாம், அது ஆபத்தான பாலியல் பழக்கமாகவும் இருக்கலாம்.
செக்ஸ்டிங் செய்வதற்கான காரணங்கள் (What are the causes of sexting?)
வளரும் பருவத்தில் பாலியல் விஷயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது இயல்பானதே. அது எல்லோரிடமும் காணப்படும் ஒன்று, அது அவர்களது வளர்ச்சியின் ஒரு பகுதியுமாகும். ஆனால், செக்ஸ்டிங் பழக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், ஆண் பிள்ளைகள் இதில் ஈடுபடுவதற்கும் பெண் பிள்ளைகள் இதில் ஈடுபடுவதற்கும் காரணங்கள் வேறுபடலாம்.
காரணங்களில் சில:
ஒரு தகவல்பரிமாற்ற முறையாக: பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கும் பல இளம்பிள்ளைகளும் இளைஞர்களும் செக்ஸ்டிங் என்பது இயல்பான விஷயம் என்றும், மிகவும் அந்தரங்கமாகவும் இருப்பதாகவும் ஃபோனில் பேசிக்கொள்வதை விட பாதுகாப்பானது என்றும் கருதுகின்றனர்.
பாதுகாப்பான பாலியல் செயல்பாடு: செக்ஸ்டிங் செய்வதால் கர்ப்பமாகவோ பால்வினை நோய்கள் பரவவோ வாய்ப்பில்லை என்பதால் இதை பாதுகாப்பான செக்ஸ் என்று இவர்கள் கருதுகின்றனர்.
பிரபலமடைய: சில இளம்பிள்ளைகள் செக்ஸ்டிங் ஒரு சாதாரண செயல்பாடு என்று கருதுகின்றனர் அல்லது பெண்களிடம் நெருங்கிப் பழகி பிரபலமாக இது ஒரு வழி என்று கருதுகின்றனர். வேகமாகப் பரவும் பிரபலங்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் இவர்கள் பாதிக்கப்பட்டு, இந்தப் பழக்கத்திற்கு உந்தப்படுகிறார்கள்.
பொழுதுபோக்குக்காக: பெண் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் ஏதோ விளையாட்டுக்காகவோ ஆண்களின் கவனத்தைப் பெறவோ அல்லது செக்சியாக இருகிறோம் என்ற உணர்வைப் பெறுவதற்காகவோ செக்ஸ்டிங் செய்கிறார்கள். 2008இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெண் பிள்ளைகளில் 51% பேர் ஆண் பிள்ளைகளால் செக்ஸ்டிங் செய்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர், ஆண் பிள்ளைகளில் 18% பேர் பெண் பிள்ளைகளாலும் தனது நண்பர்களாலும் வற்புறுத்தப்படுகின்றனர் என்று தெரியவந்தது.
இதன் விளைவுகள் (What are the Consequences?)
செக்ஸ்டிங் செய்வதால் ஏற்படும் விளைவுகளில் சில:
உடல் சார்ந்தவை: இதில் ஈடுபடுபவர்கள் ப்ளாக்மெயிலிங், துன்புறுத்தல், முறைதவறி நடத்தல் போன்ற பாதிப்புகளை அடையக்கூடும். இவர்கள் பாலியல் செயல்களில் ஈடுபட வேண்டுமென்று வற்புறுத்தப்படலாம், டேட்டிங் வர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படலாம், வேறு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் செயலில் ஈடுபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படலாம்.
சமூகரீதியான விளைவுகள்: ஓர் இளம் வயதுப்பிள்ளையின் படமோ வீடியோவோ அதிகமாகப் பரவினால், பல்வேறு அவமானங்கள், கேலி கிண்டல், இணையம் மூலமாக நடக்கும் தொந்தரவுகள் போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம். கல்வி நிறுவனங்கள் அவர்களை வெளியேற்றிவிடலாம், விளையாட்டுகளிலோ பிற செயல்பாடுகளிலோ பங்கேற்க அனுமதி மறுக்கப்படலாம், இதனால் அவர்களின் கல்வியும், பிற செயல்பாடுகளும் பாதிக்கப்படும். கல்வி உதவித்தொகை பெறுவது கடினமாகலாம். பெற்றுக்கொண்டிருக்கும் உதவித்தொகை நிறுத்தப்படலாம்.
மேலும், அவர்களின் படங்களோ வீடியோக்களோ இணையத்தில் வெளிவந்தால், பிற்காலத்தில் அது அவர்களின் வாழ்க்கையையே சீர்குலைத்துவிடலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் வேலை கிடைப்பதும் கடினமாகலாம். சமூகமும், குடும்பமும் கூட அவர்களை ஒதுக்கிவைக்கக்கூடும்.
சட்டரீதியான விளைவுகள்: சிறுவர்கள் எனக் கருதப்படும் வயதுடைய பிள்ளைகளிடையே ஆபாசமான படங்கள், வீடியோக்கள் அல்லது பிற வடிவ உள்ளடக்கங்களைப் பரிமாறிக்கொள்வது குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச செயல்பாடாகக் கருதப்படும். சிறுவர்களிடம் அவர்களின் ஆபாசப் படங்களைக் கேட்பதும் அவற்றை பரப்புவதும் (படம் எடுத்தவர் அல்லது அதைப் பெரும் வேறு நபர் எவர் செய்தாலும்) பாலியல் குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இளம்பிள்ளைகளை காவலர்கள் கைது செய்யவும் முடியும்.
சொந்த வாழ்க்கையில் ஏற்படும் விளைவு:
கட்டுப்பாடிழப்பது: ஒருவர் தனது படத்தை (ஆபாசமாக இருக்கும் படத்தை) அனுப்பிவிட்டால், அதன் பிறகு அது அவரது கட்டுப்பாட்டில் இருக்காது, யாரெல்லாம் அதைப் பெறுகிறார்களோ அவர்களெல்லாம் அதை மேலும் மேலும் பலருக்கு அனுப்பிப் பரப்ப முடியும்.
ட்ராஃபி சின்ட்ரோம்: தனக்கு இப்படி வரும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பெருமையாக பிறரிடம் காட்டிக்கொள்வதற்காக அவற்றை அழிக்காமல் வைத்திருக்கும் குணத்தை ட்ராஃபி சின்ட்ரோம் என்று குறிப்பிடுகிறோம். தற்செயலாக அவை வேறு யாரிடமாவது கிடைக்கலாம், பிறகு அப்படியே அது பரவி எல்லோரும் பார்க்கும்படி இணையத்திலோ பிற ஊடகங்களிலோ வந்துவிடலாம். இதை முதலில் பெற்றவர், அது தன்னுடையது என்று ஒரு பெருமிதம் கொண்டிருப்பார், இது ஒரு மன நோய்.
பழி வாங்குதல்: காதலில் பிரிந்த இளம் பிள்ளைகள், தனது முன்னாள் காதலரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவருடைய ஆபாசமான படங்கள், செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை எல்லோருக்கும் அனுப்பிப் பரப்பலாம்.
அவமானம்: இப்படி அந்தரங்கமான படங்கள் எல்லோரும் பார்க்கக் கிடைக்கும்போது, அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்கள், அக்கம்பக்கம் வசிப்போர் என எல்லோரும் பார்க்கும்படி ஆகிவிடுகிறது, இதனால் அவர்கள் பெருத்த அவமானத்திற்கு உள்ளாவார்கள். இதனால் அவர்கள் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகரித்து, அது தற்கொலை முயற்சி வரை செல்லக்கூடும்.
போதைப் பழக்கம்: பாலியல் செயல்பாடுகளிலான ஆரம்பகால ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகாலாக செக்ஸ்டிங் இருக்கிறது. செக்ஸ்டிங் பழக்கம் இருக்கும் இளம் பிள்ளைகள் அடுத்த ஓராண்டில் பாலியல் வாழ்க்கையில் அதிக முனைப்பாக இருக்கின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் செக்ஸ்டிங் பழக்கம், யோசிக்காமல் திடீரென்று ஏதேனும் செயல்களில் ஈடுபடும் குணத்தை வளர்க்கலாம், போதைப்பழக்கத்திற்கும் வழிவகுக்கலாம்.
பயமுறுத்திப் பணியவைத்தல்: ஒருவரின் அந்தரங்க, ஆபாசமான படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் கொண்டுள்ள மற்றொருவர் தனது பாலியல், பணம் மற்றும் பிற ஆதாயங்களுக்காக பாதிக்கப்பட்டவரைப் பயமுறுத்திப் பணிய வைக்கலாம்.
பெண்கள் தவறாக நடத்தப்படுதல்: செக்ஸ்டிங் செயலில் ஈடுபட்டது ஆண், பெண் இருவருமேதான் என்றாலும், பாலியல்ரீதியாக கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதற்காக சமூகம் பெண்களை மட்டும் மூர்க்கமாக விமர்ச்சிக்கும் என்பதால் பெண்களுக்கு பிரச்சனை அதிகமாகும்.
செக்ஸ்டிங் செய்வதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை எப்படித் தடுப்பது? (How to avoid the negative consequences of sexting?)
செக்ஸ்டிங் பழக்கத்திலிருந்து விலகியிருக்க பின்வரும் குறிப்புகள் உதவும்:
அந்தப் பழக்கமே வேண்டாம்: அது போன்ற படங்கள், வீடியோக்களை எடுப்பதையே முற்றிலும் தடுத்துவிடுவது மிகவும் பாதுகாப்பானது. ஏதோ விளையாட்டாக படமோ வீடியோவோ எடுத்துவிட்டாலும், அதை யாருக்கும் பகிர வேண்டாம்.
முடியாது என்று கூறிவிட வேண்டும்: ஒருவேளை உங்களை ஒருவர் வற்புறுத்தினால், அது உங்களுக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தாலும் கூட மறுத்துவிடவும். அது முன்பின் தெரியாத நபர் எனில், அவர்களின் செய்திக்கு பதிலளிக்கவும் வேண்டாம், உங்கள் பெற்றோர்/பாதுகாவலரிடம் சொல்லவும் அல்லது காவல் துறையிடம் புகாரளிக்கவும்.
உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவும்: தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பிரச்சனையில் சிக்கியிருந்தால், உங்கள் பெற்றோரிடமோ அல்லது நம்பகமான ஒருவரிடமோ சொல்லத் தயங்க வேண்டாம். அவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உதவுவார்கள்.
பகிர்வதைத் தவிர்க்கவும்: செக்ஸ்டிங் படமோ, வீடியோவோ அல்லது பிற உள்ளடக்கமோ உங்களுக்கு வந்தால், அதை யாருக்கும் அனுப்ப வேண்டாம், அது நம்பிக்கை துரோகமாகவும், சில சமயம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் குற்றமாகவும் கருதப்படும். ஆகவே, மறக்காமல் அதுபோன்ற செய்திகளையும், உள்ளடக்கங்களையும் அழித்துவிடவும்.
துணிச்சல் வேண்டும்: எச்சரிக்கையாக இருந்தும் கூட, சூழ்நிலை சந்தர்ப்பத்தின் காரணமாக நீங்கள் இது போன்ற சிக்கலில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது, அப்படி ஏதேனும் நடந்தாலும் மனதைத் தளரவிட வேண்டாம், நம்பிக்கையோடு இருங்கள். இளம் வயதுப் பிள்ளைகள் சிலர் இது போன்ற பிரச்சனைக்கு தற்கொலைதான் தீர்வு என்று விபரீதமாக நினைப்பதுண்டு, ஆனால் ஒருபோதும் அது பற்றி யோசிக்காதீர்கள்.
பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்,
இதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது, பெற்றோர், நண்பர்கள், காவல் துறையிடம் உங்கள் நிலையைக் கூறி உதவி பெற்று, துணிச்சலாக அந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வெல்ல முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு அவமானப் படுவது போலத் தோன்றலாம், ஆனால் தற்கொலை இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வே அல்ல.
விழிப்போடு இருங்கள், எல்லோருக்கும் இந்த விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புங்கள்: இளம் பிள்ளைகள் ஒவ்வொரும் (செய்திகளைப் பெறுபவரும் சரி, அனுப்புபவரும் சரி) செக்ஸ்டிங் பழக்கத்தின் விளைவுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது முக்கியம்.
உங்கள் நண்பரோ, உங்களுக்குத் தெரிந்தவரோ இந்தச் செயலில் ஈடுபடுவதாகத் தெரிந்தால், காவல் துறை இதில் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள தீய விளைவுகளைப் பற்றி அவருக்கு எடுத்துக்கூறி சரிசெய்துகொள்ள அவருக்கு உதவுங்கள். அவரிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்தையும் அழித்துவிடுமாறு கூறுங்கள்.
செக்ஸ்டிங் பழக்கத்தின் காரணங்கள், அதனால் எவ்வளவு கெடுதலான விளைவுகள் ஏற்படலாம் என்பது பற்றியெல்லாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டால்தான், ஒருவரால் தன்னையும் தனது நண்பர்களையும் அந்தப் பழக்கத்தால் பாதிக்கப்படாமல் காக்க முடியும்!