அந்த‘ விஷயத்தில் உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?

401

Kamasutra sex positions, Sex positions for better orgasm, Sex positions for deeper, Tantra and Kama Sutra Sexual Positions, Top sex Kamasutra positions to add zing to your sex life, கலவி நிலை, காமசூத்ரா

பெண்களுக்கு உடலுறவில் குறைந்த அளவு தான் நாட்டம் இருக்கும், அவர்களுக்கு உடலுறவு குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு தான் அதிகளவில் உடலுறவு பற்றிய உணர்வு அதிகரிக்கும். அது, தூண்டப்பட வேண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

என்ன இருந்தாலும், ஒரு வயதை கடக்கும் போது உடலுறவு பற்றிய உணர்வு குறைய தான் செய்யும். அந்த வகையில் முப்பது வயதை கடக்கும் பெண்களுக்கு எழும் உடலுறவு பற்றிய சந்தேகம் என்ன? அதை குறித்து நிபுணர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

முப்பது வயதைக் கடக்கும் பெண்களின் மனதில் அதிகம் காணப்படும் சந்தேகம், உடலுறவு பற்றிய உணர்வு குறைந்துவிடுமோ என்பது தான். ஆனால், இது உண்மை அல்ல, அப்படி ஏதும் ஆகாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முப்பது வயதை கடக்கும் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது எனினும், உண்மையில் உடலுறவு பற்றிய உணர்வு குறைவதற்கு, உடல் வடிவம், இரத்தம், பதட்டம், மன ரீதியாதான் எதிர்மறை தாக்கங்கள் தான் முதன்மை காரணியாக இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமன், உடலில் இரத்தம் அல்லது இரத்த ஓட்டம் குறைவது, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பெண்ணிடம் அந்த உணர்வில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் போது அந்தப் பெண்ணுக்கு உடலுறவில் உச்ச நிலை அடையாமல் போகலாம். முக்கியமாக நீரிழிவு நோய் பெண்களுக்கு நரம்பியல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் உண்டாக காரணியாக இருக்கிறது.

ஹார்மோன் குறைபாடு உண்டாகும் போது உடலுறவு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போது உடல் உறவில் உணர்வு குறையலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போதுதான் உடலுறவில் சிறந்து முழுமையாக ஈடுபடுவார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நபரின் அந்த உணர்வை கட்டுப்படுத்துவது அவரது மனதும், மூளையும் தான். முப்பது வயதை கடக்கும் பெண்கள் தங்கள் மனநிலையை இலகுவாக வைத்துக் கொண்டாலே போதுமானது, அதனால் அந்த உணர்வில் குறைவு ஏற்படாது. மனநிலை அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணிடம் செக்ஸ் உணர்வு குறைய வாய்ப்புகள் உண்டு.