செக்ஸ் மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?

2312

பொதுவாகவே நூற்றில் தொண்ணூறுக்கும் மேலான மக்கள் மத்தியில் செக்ஸ் மீதான ஈர்ப்பு, கவனம் அதிகமாக தான் இருக்கிறது. இது ஏன் என்று நாம் என்றும் யோசித்து இல்லை. வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது ஏன் எண்ணம் செக்ஸ் என்ற ஒற்றை விஷயத்தில் அதிக ஈர்ப்பு கொள்கிறது? ஆண்கள் தான் செக்ஸில் அதிக ஆரவாரம் கொள்கின்றனர் என்பதெல்லாம் தவறு. இதில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. நமது சமூகம், வாழ்வியல் மற்றும் கல்வி முறையில் நடக்கும் சில தவறுகள் மற்றும் குளறுபடி காரணத்தால் தான் செக்ஸ் என்ற விஷயத்தின் மீதான ஈர்ப்பு அதிகரிக்க காரணம்….

படிப்பு! வாழ்வியல் கல்வி என்பதை செக்ஸ் கல்வி என்ற தவறான பெயர் கொடுத்து அதை கற்பிக்க கூடாது என ஒரு பெரும் போராட்டமே நடந்தது. அப்படி பார்த்தல் எட்டாம் வகுப்பில் இருந்து இனப்பெருக்க அறிவியல் என்ற பாடப்பகுதியையே அகற்ற வேண்டுமா? ஒரு மாணவன் / வி அவரது 13-ம் வயதை எட்டும் போது இதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் தான், அந்த அறிவியல் பகுதி சேர்க்கப்படுகிறது. ஆனால், எத்தனை பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் அந்த பாடத்தை முழுமையாக தெளிவாக நடத்துகின்றனர் என்பது பெரிய கேள்வி தான். உயிரியல், வேதியல், இயற்பியல் போல இனப்பெருக்க அறிவியலும் சாதாரணமாக நடத்தப்பட்டாலே பெரும்பாலும் செக்ஸ் என்றால் என்ன என்ற அறிவும், தெளிவும் தெரிந்துவிடும். அதன் பிறகு தவறான பாதையில் சென்று அதை யாரும் தேட வேண்டிய தேடலும், அவசியமும் இருக்காது.

ஆர்வம்! புத்தகத்தில் இருந்து நாம் கற்பிக்காமல் சாதரணமாக நீக்கிவிடும் ஒன்று தான், பிள்ளைகள் அதன் மீது அதிக ஆர்வம் காட்ட காரணமாகிவிடுகிறது. பதின் வயதில் இரகசியமாக ஒரு குழந்தை செக்ஸ் பற்றி தேடி படிக்க ஆர்வம் தூண்டப்படுவதே அதை தவிர்பதால் தான். இந்த ஆர்வத்தை சரியான முறையில் கற்பித்துவிட்டால் முளையிலேயே விஷத்தன்மையான எண்ணங்கள் ஒரு குழந்தை மனதில் பரவாமல் தடுக்க முடியும்.

செயற்முறை! பதின் வயதில் தான் குழந்தைகள் கேள்வி கேட்பதை தவிர்த்து, செயற்முறையில் கற்றுக்கொள்ள அதிக ஈடுபாட காண்பிப்பார்கள். இந்த நேரத்தில் செக்ஸ் பற்றிய விஷயங்கள் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் அறியப்படும் போது, அது சார்ந்த தெளிவு இருந்தால், செயற்முறை படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யார் மனத்திலும் எழாது. இது மாணவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பொருந்தும். இன்றளவும் இருபதுகளில் வாழ்ந்து கொண்டு, செக்ஸ் என்றால் என்ன என்ற முழு தெளிவு இல்லாமல் வாழும் நபர்கள் ஏராளம்.

ஆன்லைன்! கணினி யுகத்தின் அடுத்த வெர்ஷன் இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் உலகம். ஆன்லைனில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை. அதனால் இன்றும் செக்ஸ் பற்றி மூடி மறைக்க எதுவுமில்லை. தவறானதை படித்து கவன சிதறல் உண்டாக காரணமாக இருக்காமல், சரியானவற்றை தெளிவாக கற்றுகொடுக்க முயல்வதே சிறந்தது

காது வழி அறிதல்! நாம் காதுகள் மூலம் அறியும் அனைத்தும் 100% உண்மையானது அல்லது. ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவும் போதே அதில் ஒருசில கலப்பு மற்றும் சுய அனுபவம் என்ற பெயரில் போலித்தனம் சேர்ந்து தான் வரும். இந்த காது வழி கற்றல் தான் இந்த விஷயத்தில் நிறைய குளறுபடி உண்டாக காரணியாக இருக்கிறது. மேலும், இதுபோன்ற காரணத்தால் செக்ஸ் பற்றி அதிகம் பேசுவதற்கு தான் தூண்டுதல் அதிகரிக்கிறது.